இலங்கைசெய்திகள்

புத்தளம் – அனுராதபுரம் பிரதான வீதியில் விபத்து

17 2
Share

புத்தளம் – அனுராதபுரம் பிரதான வீதியில் விபத்து

புத்தளம் (Puttalam) – அனுராதபுரம் (Anuradhapura) பிரதான வீதியில் உள்ள நீர் வழங்கல் அதிகாரசபை அலுவலகத்திற்கு முன்பாக சொகுசு காருடன் கெப் ரக வண்டி ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவமானது, நேற்று (11.07.2024) மாலை இடம்பெற்றுள்ளது.

அனுராதாபுரம் பகுதியிலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற சொகுசு கார் ஒன்றுடன் புத்தளத்திலிருந்து அநுராதபுரம் நோக்கிச் சென்ற கெப் ரக வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மோதியுள்ளது.

இதன்போது, கார் தலைகீழாக புரண்டு முற்றாக சேதமாகியுள்ளது.

அதேவேளை, காரில் பயணித்தவர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

மேலும், கெப் ரக வண்டியின் சாரதி, பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....