நாடளாவிய ரீதியில் மீண்டும் கொரோனாத் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், பாடசாலை மாணவர்கள் பலரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல வகுப்பறைகள் மூடப்பட்டுள்ளன.
நாட்டின் நிலையை கருத்தில்கொண்டு அனைத்து பாடசாலைகளையும் விரைவில் மூடவேண்டும் என இலங்கை அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் பியசிறி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
அத்துடன், பாடசாலைகளை உடனடியாக மூடாதுவிட்டால் மாணவர்கள் பெரும் ஆபத்துக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்படும். குறிப்பாக சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கு தோற்றும் மாணவர்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்க வேண்டியேற்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
#SriLankaNews