மொரட்டுவை – கொரலவெல்ல பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் பாணந்துறை வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அலுபோமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞரே இவ்வாறு காயமடைந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைத் தேடி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews