24 663ae36e71f9b
இலங்கைசெய்திகள்

வீசா மோசடியை அம்பலப்படுத்திய இளைஞருக்கு நெருக்கடி கொடுத்தால் போராட்டம் வெடிக்கும்

Share

வீசா மோசடியை அம்பலப்படுத்திய இளைஞருக்கு நெருக்கடி கொடுத்தால் போராட்டம் வெடிக்கும்

வீசா விநியோகத்தில் இடம்பெறவிருந்த பாரிய மோசடியை தனி ஒருவனாக இளைஞர் ஒருவர் அமபலப்படுத்தியுள்ள நிலையில் தவறுகளை அரசாங்கம் திருத்திக்கொள்ள வேண்டுமே தவிர அந்த இளைஞருக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தினால் அரசாங்கம் மீண்டும் பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என ஜே வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் (Vijitha Herath) எச்சரித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (07.05.2024) உரையாற்றும்போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், “வெளிநாட்டவர்களுக்கான வீசா விநியோகத்தில் இடம்பெறவிருந்த பாரிய மோசடியை இளைஞர் ஒருவர் தனி ஒருவனாக வெளிப்படுத்தியுள்ளார்.

அரசமைப்பால் வழங்கப்பட்டுள்ள பேச்சுரிமையை அந்த இளைஞர் பயன்படுத்தியுள்ளார். அந்த இளைஞர் குறிப்பிட்ட விடயங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியமை தொடர்பில் மக்கள் அவதானம் செலுத்தியதன் பின்னரே அமைச்சரவை பழைய முறைக்கு விசா விநியோகிக்கத் தீர்மானித்துள்ளது.

எனவே, அரசாங்கம் தவறுகளைத் திருத்திக்கொள்ள வேண்டும். அதனை விடுத்து அந்த இளைஞருக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டால் சட்டத்தரணிகளும், நாட்டு மக்களும் அந்த இளைஞருக்குச் சார்பாகச் செயற்படுவார்கள்.

அரசுக்கு எதிராக மீண்டும் ஒன்றிணைவார்கள். அரசு மீண்டும் பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்.

மேலும், கடந்த கால நிகழ்வுகளை அரசு நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்” என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
09 5
செய்திகள்விளையாட்டு

ஈரான் பதற்றம் எதிரொலி: டி20 உலகக் கோப்பைக்காக ஐசிசி அவசரகாலத் திட்டங்களைச் செயல்படுத்தியது!

ஈரான் மீதான ராணுவத் தாக்குதல்களால் மத்திய கிழக்கில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ள நிலையில், ஐசிசி உறுப்பு...

08 4
செய்திகள்உலகம்

பஹ்ரைனில் ஈரானின் தாக்குதல் அச்சுறுத்தல்: அமெரிக்கத் தூதரகம் குடிமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

ஈரானிலிருந்து பஹ்ரைன் மீது ஏவுகணை அல்லது ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில்,...

07 3
செய்திகள்இலங்கை

அரச ஊழியர்களுக்கான சொத்துக் கடன் எல்லை 50 இலட்சமாக அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கமைய, அரச உத்தியோகத்தர்களுக்கான சொத்துக் கடன் எல்லையை...

06 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு பதற்றம்: இலங்கையில் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பில்லை – கூட்டுத்தாபனம் அறிவிப்பு

மத்திய கிழக்கில் மீண்டும் மோதல்கள் ஆரம்பமாகியுள்ள போதிலும், இலங்கையின் எரிபொருள் விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது...