24 663acc60c84c2
இலங்கைசெய்திகள்

நடைமுறைக்குவரவுள்ள ஜனாதிபதியின் இரண்டு புதிய உதவி திட்டங்கள்!

Share

நடைமுறைக்குவரவுள்ள ஜனாதிபதியின் இரண்டு புதிய உதவி திட்டங்கள்!

புதிதாக இரண்டு புலமைப்பரிசில் உதவி திட்டங்களை ஜனாதிபதி நிதியம் ஆரம்பித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்(Ranil Wickremesinghe) அறிவுறுத்தலுக்கமைய தற்போது வழங்கப்படும் புலமைப்பரிசில் திட்டங்களுக்கு மேலதிகமாக, இந்த இரண்டு புலமைப்பரிசில் திட்டங்களும் இம்மாதம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

அதன்படி, பிரிவெனா மற்றும் பெண் பிக்குணி கற்கை நிறுவனங்களில் கற்கும் பிக்கு மற்றும் பிக்குணிகளுக்கும் ஏனைய மாணவர்களுக்கும், க.பொ.த உயர்தரத்தில் தகவல் தொழில்நுட்பம் கற்கும் மாணவர்களுக்குமான புதிய புலமைப் பரிசில் வேலைத்திட்டம் இம்மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

நாடளாவிய ரீதியில் பெண் பிக்குணி கற்கை நிறுவனங்களுக்கும்,ஏனைய மாணவர்களுக்கான 822 கற்கை நிறுவனங்கள் இத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டிருப்பதோடு, இதற்காக மேற்படி கற்கை நிறுவனமொன்றுக்கு 06 புலமைப்பரிசில்கள் என்ற அடிப்படையில் நிறுவனத் தலைவர்களின் பரிந்துரைக்கமைய பயனாளிகள் தெரிவு செய்யப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலைமைப்பரிசிலுக்காக விண்ணப்பிக்கு பிரிவெனாக்களில் பயிலும் வறிய மாணவர்கள் உரிய வகையில் நிரப்பட்ட, விண்ணப்பங்களை 2024 மே 22 ஆம் திகதிக்கு முன்னதாக பிரிவெனா தலைவர் / நிறுவனத் தலைவரிடம் மட்டும் கையளிக்க வேண்டியது அவசியமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு கட்டங்களாக வழங்கப்படும் இந்த புலமைப்பரிசில் பிரிவெனாக்களில் கற்கும் 5000 வறிய மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளதோடு, முதல் கட்டத்தின் கீழ் 2024 மே மாதம் தொடக்கம் 12 மாதங்களுக்கு 3000/- வும் இரண்டாம் கட்டத்தின் கீழ் 24 மாதங்களுக்கு 6,000/- வும் வழங்கப்படவுள்ளது.

இதேவேளை அனைத்து கல்வி வலயங்களிலும் முன்னெடுக்கப்படவிருக்கும் இந்த புலமைப்பரிசில் வேலைத்திட்டத்தின் கீழ் வலயமொன்றில் குறைந்தபட்சமாக 50 மாணவர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக தெரிவு செய்யப்படும் 2024 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய விண்ணப்பதாரிகளுக்கு 24 மாதங்களுக்கு 6,000/- வழங்கப்படும்.

இதற்கான விண்ணப்பங்களை 2024 மே 22 ஆம் திகதிக்கு முன்னதாக ஜனாதிபதி நிதியத்திற்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்குமாறு மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான மேலதிக விபரங்களையும் விண்ணப்பத்தையும் www.presidentsfund.gov.lk உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் www.facebook.com/president.fund உத்தியோகபூர்வ Face Book பக்கத்திலும் பெற முடியும்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...