images 1 6
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் குருநகரில் 200 மில்லிகிராம் ஹெரோயினுடன் இளைஞர் கைது!

Share

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று (24) போதைபொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், “யாழ். மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், யாழ்ப்பாண காவல் போதை தடுப்பு பிரிவினர் சுற்றிவளைப்பினை முன்னெடுத்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளையடுத்து, அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் கனேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி தங்கி இருந்தமை தொடர்பு விசாரணை மேற்கொள்வதற்காக கொழும்பிலிருந்து வருகை தந்த குழுவினர் இன்று 24-10-2025) மாலை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த பகுதியில் இருந்து மேற்படி கஞ்சா பொதி மீட்கப்பட்டதுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார் இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் சான்று பொருட்களும் கிளிநொச்சி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது

Share
தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...