12 4
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய இளைஞன்

Share

மாத்தறை, வெலிகமவில் பகுதியில் பேருந்து ஒன்றில் பயணி ஒருவர் மறந்துவிட்டு சென்ற பயணப்பையை அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு லட்சம் ரூபாய் பணத்துடனான பையை கண்டெடுத்த இளைஞன், அதனை உரிமையாளரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.

அளுத்கம பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியில் பணிபுரிந்த ஒருவர், வேலை முடிந்து வீடு திரும்புவதற்காக மாத்தறை-கொழும்பு பேருந்தில் ஏறி, பின்னர் ரத்கம பகுதியில் இறங்கியிருந்தார்.

அப்போது அவரிடம் இருந்த கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் கொண்ட பணப்பை அவர் பயணம் செய்த பேருந்தில் மறந்து விட்டு சென்றுள்ளார்.

இதனை அவதானித்த பேருந்தில் பயணித்த இளைஞர் ஒருவர் அதனை பெற்று, அது குறித்து பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்குத் தகவல் வழங்கியுள்ளார்.

பின்னர், பணப் பையின் உரிமையாளரை தொலைபேசி அழைப்புகள் மூலம் கண்டுபிடித்த இளைஞன் உரிமையாளரின் அடையாளத்தை உறுதிசெய்து, அதனை ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த முன்மாதிரியான செயலுக்காக பணப் பையின் உரிமையாளர் அந்த இளைஞருக்கு பத்தாயிரம் ரூபாய் பணத்தையும் வழங்கியுள்ளார்.

எனினும் அந்த இளைஞன் அதை மறுத்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பண நெருக்கடியாக காலத்தில் இவ்வாறான இளைஞனின் செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Share
தொடர்புடையது
25 1
செய்திகள்இலங்கைவிளையாட்டு

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தோல்வி: கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ஷ, தோல்விக்கான...

24 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யுத்த கால ஊடகவியலாளர் படுகொலைகள்: உண்மைகளைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் – ரவூப் ஹக்கீம்!

மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு மற்றும் “பாரதி ஒரு மனிதாபிமான...

23 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியல் இருப்புக்கு போராளிகள் தேவை, ஆனால் அவர்களின் தேவைகள் புறக்கணிப்பு: சிவகுரு மதிவண்ணன் குற்றச்சாட்டு!

புனித பூமி மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு மதிவண்ணன் நேற்று (மார்ச் 1)...

22 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அவசரகால நிலையை நீட்டிக்க அரசாங்கம் பரிசீலனை!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாடு...