கொழும்பு – காலிமுகத்திடலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு எதிரான போராட்டம் இன்று ஆறாவது நாளாகவும் தொடர்கின்றது.
தமிழ் – சிங்களப் புத்தாண்டு தினமான இன்றும் இளைஞர்களும் யுவதிகளும் போராட்டக் களத்திலேயே தங்கியிருக்கின்றனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது அரசு வீட்டுக்கு செல்லும் வரையில் போராட்டக் களத்திலிருந்து தாம் வீடு செல்லப் போவதில்லை என்று அறிவித்திருந்த போராட்டக்காரர்கள், புதுவருடத்தைப் போராட்ட களத்திலேயே கொண்டாடுவதாகவும் தெரிவித்திருந்தனர். அந்தவகையிலேயே இன்றைய தினத்திலும் போராட்டக்காரர்கள் களத்தில் இருந்து தமது போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுக்கின்றனர்.
#SriLankaNews