வட்டுக்கோட்டை விபத்தில் இளைஞன் உயிரிழப்பு!

யாழில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அராலி செட்டியார் மேடம் பகுதியை சேர்ந்த புலோஷாந்த் (வயது 22) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.

வட்டுக்கோட்டை துணைவி பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்ற குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நவாலி பகுதியில் உறவினர் வீடொன்றில் இடம்பெற்ற பூப்புனித நீராட்டு விழாவில் கலந்து கொண்ட பின்னர் இரு இளைஞர்களும் தமது வீடு நோக்கி சென்ற போது , மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாக நின்ற மரத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

அதன் போது மோட்டார் சைக்கிளில் ஓட்டி சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். அவருடன் பயணித்த மற்றைய இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

IMG 5724

#SriLankaNews

Exit mobile version