tamilni 254 scaled
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த இளைஞன் பலி

Share

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த இளைஞன் பலி

கொரியாவில் இருந்து இலங்கை வந்த இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பதிவாகி உள்ளது.

பல வருடங்களாக தென் கொரியாவில் பணிபுரிந்து வந்த இளைஞன் இலங்கைக்கு வந்த நிலையில் மீண்டும் அங்கு செல்ல தயாராக இருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

கம்பளை போவல, பலதொர பிரதேசத்தில் வசிக்கும் இளம் வர்த்தகரான மகேஷ் சமரநாயக்க (30) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் திருமணமான அவர் கொரியாவில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளார்.

இலங்கையில் இயந்திரங்கள் மூலம் மரம் வெட்டும் தொழில் ஒன்றையும் ஆரம்பித்துள்ளார். இதன்போது மரம் ஒன்றை வெட்டும் போது அது அவர் மீது விழுந்து விபத்து ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

தலையில் அடிபட்ட நிலையில் கம்பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

அவரும் அவரது மனைவியும் கொரிய பரீட்சையில் சித்தியடைந்து மீண்டும் கொரியா செல்ல தயாராகிக் கொண்டிருந்த போது இந்த அசம்பாவித சம்பவத்தை எதிர்கொண்டனர்.

பிரேத பரிசோதனையை மேற்கொண்ட கம்பளை போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி அமிலதா மரம் விழுந்ததில் தலை மற்றும் மூளையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 6947f8ecd0dc8
செய்திகள்அரசியல்இலங்கை

கிளிநொச்சியில் அரசியல் சந்திப்பு: சிவஞானம் – சந்திரகுமார் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் மற்றும் சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் மு....

images 6 6
செய்திகள்அரசியல்இலங்கை

தனியார் காணிகள் விடுவிக்கப்படும்; சான்றிதழ் வழங்கும் நிகழ்வைத் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம் – அமைச்சர் சுனில் செனவி!

யாழ்ப்பாணம் – தையிட்டி திஸ்ஸ விஹாரை விவகாரத்திற்கு விரைவில் முறையான தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என புத்தசாசனம்,...

1736835939 Customs L
இலங்கைஅரசியல்செய்திகள்

துறைமுக நெரிசலைக் குறைக்க அதிரடி நடவடிக்கை: 8,000 கொள்கலன்களை விரைவாக விடுவிக்கத் திட்டம்!

நடப்பாண்டின் இறுதிப் பகுதியில் இறக்குமதி, ஏற்றுமதி மற்றும் மறு ஏற்றுமதி கொள்கலன்களின் வரத்து அதிகரிக்கும் என...

hinad 1766299876
செய்திகள்உலகம்

சீனாவில் அதிசயம்: கடலுக்கு அடியில் ஆசியாவின் மிகப்பெரிய தங்கப் படிமம் கண்டுபிடிப்பு!

கிழக்கு சீன கடல் பகுதியில், ஆசியாவிலேயே மிகப்பெரிய அளவிலான கடலுக்கடியிலான தங்கப் படிமத்தைச் சீனா கண்டுபிடித்துள்ளது....