இலங்கைசெய்திகள்

தொடர் திருட்டுக்களில் ஈடுபட்ட இளைஞன் கைது!!

Share
0010010
Share

வவுனியா, சகாயாமாதாபுரம் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, குருமன்காடு நகரசபை விடுதியில் உள்ள வீடு ஒன்றில் அண்மையில் 3 பவுண் நகை திருடப்பட்டிருந்தது. அத்துடன் வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலும் 2 பவுண் நகை திருடப்பட்டிருந்தது.

வீடு புகுந்து இடம்பெற்ற இத் திருட்டு சம்பவங்கள் தொடர்பில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனைடிப்படையில் குறித்த இரு திருட்டு சம்பவம் தொடர்பில் வவுனியா, சகாயாமாதாபுரம் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் திருடப்பட்ட நகைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

#SrilankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
19 5
உலகம்செய்திகள்

வெளிநாட்டு திரைப்படங்களுக்கு 100 சதவீத வரி: ட்ரம்ப் உத்தரவு

வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald...

20 6
இலங்கைசெய்திகள்

விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட தங்க நகைகள்..! கொழும்பு நீதவான் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்கப்பட்டவை எனக்கூறப்படும் தங்க நகைகளை சோதித்து அறிக்கைப்படுத்துமாறு கொழும்பு நீதவான்...

18 5
இலங்கைசெய்திகள்

தேர்தல் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு

தேர்தல் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. யாழ்....

16 5
இலங்கைசெய்திகள்

லண்டனில் வீதியில் வசிக்கும் இலங்கை இளைஞன் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்

பிரித்தானியாவின் லண்டனில் வீதி ஓரத்தில் வசிக்கும் இலங்கை இளைஞன் தொடர்பில் பிபிசியின் ஆவண படம் மூலம்...