கொழும்பு வைத்தியசாலையில் இளம் பெண் மரணம்
கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கண் சத்திரசிகிச்சையின் பின்னர் பெண் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் குடும்பத்தினர் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
குறித்த பெண் சுயநினைவு பெறாமல் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கடந்த 5 ஆம் திகதி உயிரிழந்த பெண்ணின் சடலம் நேற்று (06.07.2023) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் இறந்த பெண்ணின் கணவர், அறுவை சிகிச்சைக்கு சுயநினைவை ஏற்படுத்தப் பயன்படுத்தப்பட்ட ஊசியால் தனது மனைவி இறந்ததாக குற்றம் சுமத்தியுள்ளார்.
கொஸ்கொட, பொரலுகெட்டிய தெற்கில் வசிக்கும் 35 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயார், அண்மையில் தேசிய கண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஒவ்வாமை காரணமாக அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதற்கமைய, அவருக்கு மீண்டும் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், அதன் பிறகு அவருக்கு சுயநினைவு திரும்பாமல் உயிரிழந்துள்ளார்.
இறந்த பெண்ணின் பிரேதப் பரிசோதனையின் பின்னர், உடலின் பாகங்கள் மேலதிக பரிசோதனைகளுக்காக மரண விசாரணை அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பிரேத பரிசோதனைக்குப் பிறகு, உடல் குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பாக குழு ஒன்றின் ஊடாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Leave a comment