tamilni 98 scaled
இலங்கைசெய்திகள்

தென்னிலங்கையில் கழுத்தை வெட்டி கொலை செய்த காதலன்

Share

தென்னிலங்கையில் கழுத்தை வெட்டி கொலை செய்த காதலன்

ஹோமாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று காலை 22 வயதுடைய யுவதியின் கழுத்தை வெட்டி படுகொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கொலையை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் பிரதேசத்தை விட்டு ஓடி சென்று களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் தான் சுகயீனமடைந்திருப்பதாக கூறி அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் தெஹிவளை எண்டர்ன் வீதி பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய அச்சினி துஷாரி என்ற யுவதியே இன்று காலை ஹோமாகம நீதிமன்ற வீதியில் கழுத்தை வெட்டி கொலை செய்ய்பட்டுள்ளதாக களுத்துறை உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை நடந்த விசாரணையில் காதல் உறவின் அடிப்படையில் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சந்தேகநபர் இன்று காலை களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது சட்டைப் பையில் இரத்தக் கறை காணப்பட்டுள்ளது.

தலைமையக பொலிஸ் பரிசோதகர் ருவன் விஜேசிங்கவின் பணிப்புரைக்கமைய மேலதிக விசாரணைகளின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் பொலிஸ் பாதுகாப்பில் களுத்துறை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...