இலங்கையில் இளைய தலைமுறையினர் திருமணத்திற்கு முன் தலசீமியா பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார மேம்பாட்டு பணியகம் கேட்டுக் கொண்டுள்ளது.
ஊடகங்களுக்கு உரையாற்றிய சுகாதார மேம்பாட்டு பணியக அதிகாரி ஒருவர், உடலில் போதுமான அளவு ஹீமோகுளோபின் இல்லாத இரத்தக் கோளாறைக் கண்டறிய கிடைக்கக்கூடிய விவரங்கள் மற்றும் சோதனைகளை சுட்டிக்காட்டியுள்ளார்.
குடும்பங்கள் மூலம் பரவும் தலசீமியாவை கண்டறிய முழு இரத்த எண்ணிக்கை உதவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
“திருமணத்திற்கு முன்பு இளைஞர்கள் செய்யும் இந்த சோதனைகள் தங்கள் குழந்தைகளுக்கு இரத்தக் கோளாறினால் பாதிக்கப்படுவதனை தடுக்க உதவும்.
இதன் காரணமாக இளைய தலைமுறையினர் தலசீமியா பரிசோதனைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்,” என அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.