24 66e5874c13714
இலங்கைசெய்திகள்

வெறும் எலும்புக்கூடு அரசியல் போக்குடைய சஜித்தின் நகர்வு: யோதிலிங்கம் வெளிப்படை

Share

சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெறும் எலும்புக்கூடு என அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும்மான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலெயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவித்ததாவது,

”ஜனாதிபதி தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. மூன்று பிரதான வேட்பாளர்களும் தமது தேர்தல் அறிக்கைகளையும் வெளியிட்டு விட்டனர்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை மூன்று தேர்தல் அறிக்கைகளும் பூச்சியம் தான்.

மாகாண சபை பற்றிக் கூட முழுமையாக கூறுவதற்கு அவை தயாராக இல்லை. பொலிஸ், காணி அதிகாரங்கள் பற்றி மூச்சைக் கூட காணோம்.

ஆக்கிரமிப்பு பொறுப்புக்கூறல் விடயங்களிலும் இதே நிலை தான.; இவர்களுடைய இயலாநிலை தமிழ்ப்; பொது வேட்பாளரை மேலும் நியாயப்படுத்தியுள்ளது.

அநுரகுமார திசநாயக்கா போர் குற்ற விசாரணை நடாத்தப்படும் என முதல்நாள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டார்.

தென்னிலங்கையில் எதிர்ப்பு ஏற்பட்டதால் அடுத்த நாளே அதனை வாபஸ் பெற்றார். நாமல்ராஜபக்ச வழக்கம் போல 13வதுதிருத்தம் நடைமுறைப்படுத்துவதையே ஏற்கமாட்டோம் எனக் கூறியிருக்கின்றார்.

சிங்கள தேசத்தில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதைக் கூறமுடியாத நிலை. அநுரகுமார திசநாயக்காவின் செல்வாக்கு அதிகரித்து வருகின்றது என்றே செய்திகள் கூறுகின்றன.

குறிப்பாக சிங்கள இளைஞர்கள் அதிகளவில் அனுரா பக்கம் நிற்பது போலவே தோற்றம் தெரிகின்றது.

மலையகத்திலும் முன்னரை விட அதன் செல்வாக்கு அதிகரித்துள்ளது. ஒவ்வொரு லயன்களாக சென்று அவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்.

சிறு சிறு கூட்டங்களையும் நடாத்துகின்றனர். பெருந்தோட்டங்களில் தொழிற்சங்க ஆதிக்கம் அதிகமாக இருப்பதினால் அவர்களின் முயற்சிகள் எவ்வளவு தூரம் வாக்குகளாக மாறும் என்பதை சொல்வது கடினம்.

படித்த நடுத்தரவர்க்கத்தினரிடையே அதன் செல்வாக்கு அதிகரிக்கலாம். சஜித் பிரேமதாசாவின் பலம் என்பது அதன் ஐக்கிய முன்னணியின் பலம் தான்.

மலையக, முஸ்லீம் கட்சிகளின் அதனுடன் இணைந்திருப்பது அதற்கு ஒரு சேமிப்புப் பலம். எனினும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் கட்சி மாறியமை தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆதரவில் ஒரு கறுப்புப் புள்ளியைக் குத்தியுள்ளது.

வேலுகுமார் – திகாம்பரத்தின் பகிரங்க கைகலப்பும் கறுப்புப் புள்ளியை பெரிதாக்கியுள்ளது எனலாம்.

வேலுகுமார் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டமைக்கு அவரது செல்வாக்கு ஒரு காரணமாக இருந்த போதிலும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் அடையாளமும் முக்கிய காரணம்.

முஸ்லீம் மக்களில் ஒரு பிரிவினரும் தமது விருப்ப வாக்குகளில் ஒன்றை அவருக்கு அளித்திருந்தனர்.

அதுவும் வெற்றியில் பங்கு செலுத்தியிருக்கின்றது. எதிர்காலத்தில் வேலுகுமார் வெற்றியடைவது அவருக்கு பாரிய சவாலாகவே இருக்கும்” என்றார்.

Share
தொடர்புடையது
Kerala Drugs
இலங்கை

எரித்து அழிக்கப்பட கேரள கஞ்சா.

கடந்த காலங்களில் கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட கஞ்சா பொதிகள் வெவ்வேறு திகதிகளில் கைப்பற்றப்பட்ட நிலையில்...

question mark
இலங்கை

செல்வந்தர்களுக்கு ஏற்பட்டுள்ள திடீர் நெருக்கடி.

திடீரெனப் பணக்காரர்களாகியுள்ள சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு பொது மக்களை காவல்துறையினர் அண்மையில் கோரியிருந்த...

Gotabaya Rajapaksa 24
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக வாக்குமூலம் வழங்கிய நெருங்கிய உறவினர்!

கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருக்கு எதிராக...

dengue original 1
இலங்கை

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்வு.

அண்மையில், தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின்...