வவுனியாவில் தடம்புரண்டது யாழ்தேவி

image 0993b67a5a

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை மற்றும் கல்கிசை நோக்கி பயணித்த யாழ்தேவி கடுகதி ரயில், ஈரப்பெரியகுளம் பகுதியில் தடம் புரண்டுள்ளது.

இதன் காரணமாக வடக்கு ரயில் மார்க்கத்தில் மதவாச்சி சந்திக்கும் வவுனியாவுக்கும் இடையில் ரயில் சேவை தடைப்பட்டுள்ளது.

இன்று மதியம் 1.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், ரயில் என்ஜின் மற்றும் அதை ஒட்டிய இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதால் ரயில் பாதைக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான இரண்டு இரவு நேர அஞ்சல் ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன என்று திணைக்களம் அறிவித்துள்ளது.

#SriLankaNews

Exit mobile version