16 33
இலங்கைசெய்திகள்

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை சந்திக்கப்போகும் உலகம்!

Share

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை சந்திக்கப்போகும் உலகம்!

எதிர்வரும் நாட்களில் உலக பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாதிக்கப்படும் என உலக பொருளாதார மன்றத்தின்(WEF) கூட்டத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

உலக பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) ஆண்டு கூட்டம் 25ஆம் திகதி சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்றுள்ளது.

குறித்த கூட்டத்தில், அமெரிக்காவை சேர்ந்த பிரபல மேலாண்மை ஆலோசனை நிறுவனமான ஆலிவர் வைமனால் (Oliver Wyman) தயாரிக்கப்பட்ட அறிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், உலகம் முன்னர் எப்போதும் இல்லாத வகையில் இனி வரும் நாட்களில் பொருளாதாரத்தில் பின்னோக்கி நகரும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

எந்த அளவுக்கு எனில் ரூ.51 இலட்சம் கோடியில் தொடங்கி, ரூ.419 இலட்சம் கோடி வரை உலக வர்த்தகம் பாதிக்கப்படலாம்.

உலக நாடுகளின் GDP-ல் இந்த பணம் 5% ஆகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக நாடுகள் மத்தியில் இருக்கும் பிரிவினைகள், தன்னிச்சையாக செயல்படுதல் போன்ற காரணங்களால் இவை ஏற்படும் என்று உலகப் பொருளாதார மன்றம் கணித்துள்ளது.

இதனை ‘geoeconomic fragmentation’ என்றும் குறிப்பிட்டிருக்கிறது.

எதிர்வரும் நாட்களில் ஏற்படும் பாதிப்புகள் கடந்த 2008 பொருளாதார வீழ்ச்சியை விடவும், கோவிட் பெரும் தொற்று காலத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியை விடவும் மோசமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதனால் அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அந்த நாடுகளால் அதனை சமாளித்துக்கொள்ள முடியும்.

ஆனால், இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளால் இதை தாங்கிக்கொள்ள முடியாது.

இந்தியா மட்டுமல்லாது பிரேசில், துருக்கி, லத்தீன் அமெரிக்கா, ஆபிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் வளர்ந்து வரும் நாடுகள் இதனால் கடுமையாக பாதிக்கப்படும்.

இந்த நாடுகளில் GDP 10 சதவிகிதத்திற்கும் குறைவாக போக வாய்ப்புள்ள நிலையில், இவையெல்லாம் அணிசேரா நாடுகளாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
MediaFile 1 2
உலகம்செய்திகள்

ஜப்பானின் புதிய பிரதமராகத் தேர்வு: அந்நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமை!

ஜப்பானில் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி (LDP) பெரும்பான்மையை இழந்ததைத் தொடர்ந்து, பிரதமர் ஷிகெரு இஷிபா...

MediaFile 3
செய்திகள்இலங்கை

வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்கிறது! களு, களனி கங்கைகளில் நீர்மட்டம் அதிகரிப்பு!

மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயாவின் தாழ்வான பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய முன் எச்சரிக்கை...

image 3166dced36
செய்திகள்இலங்கை

அரச இணைய சேவைகள் வழமைக்குத் திரும்பின.

‘இலங்கை அரச கிளவுட்’ (Sri Lanka Government Cloud) சேவையில் ஏற்பட்டிருந்த சிக்கல் நிலை தற்போது...

skynews trump putin alaska 6992429
செய்திகள்உலகம்

உக்ரைனுக்கு ஏவுகணை வழங்கலைத் தடுக்க ட்ரம்பை ஈர்க்க புடின் திட்டம்? ரஷ்யா – அமெரிக்காவை இணைக்க 8 பில்லியன் டொலர்

அமெரிக்கா, உக்ரைனுக்கு தொலைதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளைக் கொடுப்பதைத் தடுப்பதற்காக, ட்ரம்பை மகிழ்ச்சிபடுத்த புடின் முயற்சி...