அத்தியாவசிய மருந்து கொள்வனவுக்காக இலங்கைக்கு ஒரு கோடி அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்குவதற்கு உலக வங்கி அனுமதியளித்துள்ளது.
இந்தத் தகவலை நிதி அமைச்சர் அலி சப்ரி வெளியிட்டுள்ளார்.
சிங்கள தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான அரசியல் நிகழ்ச்சியில், கலந்துகொண்டு அவர் இந்தத் விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், எதிர்வரும் இரண்டு வார காலப்பகுதிக்குள் சமையல் எரிவாயு, மருந்து மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக 50 கோடி அமெரிக்க டொலரை விடுவிப்பதற்கு உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
#SriLankaNews
Leave a comment