உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் ஹதாத் சர்வோஸ், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை நேற்று மாலை சந்தித்து பேச்சு நடத்தினார்.
கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பில், இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைவரம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இக்கட்டான சூழ்நிலையில் இலங்கைக்கு உலக வங்கி வழங்கிய ஒத்துழைப்புகளுக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்ததுடன், மேலதிக உதவிகளையும் கோரியுள்ளார்.
#SriLankaNews