வீட்டிலிருந்து வேலை செய்யும் கால எல்லை நீடிப்பு

Sitting ytutyuyu

அரச உத்தியோகத்தர்களை அலுவலகங்களுக்கு அழைப்பதை மட்டுப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

சுற்றறிக்கையின்படி, அன்றாட பணிகளை இடையூறு இன்றி மேற்கொள்ள குறைந்தபட்ச அத்தியாவசிய பணியாளர்களை மாத்திரமே நிறுவனத்திற்கு அழைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அரசாங்க உத்தியோகத்தர்களை அலுவலகங்களுக்கு பணிக்கு அழைப்பதைமட்டுப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையானது நேற்று மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டது.

இதேவேளை நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கிராம உத்தியோகத்தர்கள் வீட்டிலிருந்து பணி செய்ய தீர்மானித்துள்ளதாக ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.அதுல சீலமானாராச்சி தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Exit mobile version