அரச ஊழியர்கள் மேலும் ஒரு மாத காலத்துக்கு வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது,
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அரச ஊழியர்கள் தற்போது வீட்டிலிருந்து வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையிலேயே அவர்கள் மேலும் ஒரு மாத காலத்துக்கு வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கான சுற்றறிக்கை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
#SriLankaNews