tamilni 54 scaled
இலங்கைசெய்திகள்

விடுதியில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட பெண்

Share

விடுதியில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட பெண்

தலங்கமவில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் மருத்துவ உளவியலாளர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சுஜாதா முனசிங்க மானாபரன என்ற பெண்ணே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட பெண் கடந்த 26ஆம் திகதி ஆண் ஒருவருடன் விடுதிக்கு வந்திருப்பது பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.

இவருடன் விடுதிக்கு வந்த ஆண் நபர் நேற்று விடுதியை விட்டு வெளியேறி இரவு மீண்டும் வந்ததாகவும் மீண்டும் வெளியே சென்றாரா என்பது நினைவில் இல்லை என விடுதி காசாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

நேற்று மதியம் முதல் பெண்ணை காணாததால், விடுதி பணியாளர்கள் அறையின் கதவை உடைத்து பார்த்தபோது, ​​படுக்கையில் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

கடந்த 24 அல்லது 25 ஆம் திகதி குறித்த பெண் விடுதிக்கு வந்தபோது, ​​தன்னிடம் அடையாள அட்டை இல்லை எனவும், ஒரு காகிதத்தில் எழுதப்பட்ட அடையாள அட்டை இலக்கத்தை காசாளரிடம் கொடுத்ததாகவும் அது போலியானதெனவும் தெரியவந்துள்ளது.

1977 என எழுதப்பட்டிருந்தாலும், கொலை செய்யப்பட்ட பெண்ணின் வயது அதற்கும் அதிகமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அவரது பயணப் பையில் இருந்த முகவரியொன்றை பரிசோதித்த போது அது ஹப்புத்தளை பகுதியில் உள்ள தங்கும் விடுதியொன்றிற்கு சொந்தமானது என தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்த பெண் இராணுவம் மற்றும் பொலிஸாருக்கும் மருத்துவ உளவியல் ஆலோசனைகளை வழங்கியதாக கூறப்படும் செய்தி அறிக்கைகளையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

விடுதியில் உள்ள சிசிடிவி கமராக்களும் அணைக்கப்பட்டுள்ளதாகவும் அது இயங்கவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
4 1
அரசியல்இலங்கைசெய்திகள்

உங்களது ஆட்சிக்காலத்திலேயே காணிகளை விடுவியுங்கள்: ஜனாதிபதியிடம் நாகதீப விகாராதிபதி நேரில் வலியுறுத்தல்!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தனியார் காணிகளை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர...

25 68ed5a882ec6d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரவதை செய்த பொலிஸ் பரிசோதகருக்கு 7 ஆண்டுகள் சிறை: மொனராகலை மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாகச் சித்திரவதை செய்த குற்றத்திற்காகப் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு...

645574 4228922 updates
உலகம்செய்திகள்

அண்டார்டிகா பனிக்கடியில் ஒளிந்திருக்கும் மர்ம உலகம்: அதிநவீன செயற்கைக்கோள் மூலம் புதிய வரைபடம் வெளியீடு!

அண்டார்டிகாவை மூடியுள்ள பல்லாயிரக்கணக்கான அடி ஆழமான பனிப்படலத்திற்குக் கீழே மறைந்திருக்கும் நிலப்பரப்பு குறித்து சர்வதேச விஞ்ஞானிகள்...

articles2FFE3TpF1W8KlSV5Uh5Ngm
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் தண்டவாளத்தில் ரயில்கள்: திருகோணமலை, மட்டக்களப்பு இரவு நேர சேவைகள் ஜனவரி 20 முதல் ஆரம்பம்!

திட்வா (Titwa) புயல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு...