tamilni 53 scaled
இலங்கைசெய்திகள்

சனல் 4வின் அதிர்ச்சியூட்டும் காணொளி: புலம்பெயர் தமிழர்கள் மீது பழி போடும் தென்னிலங்கை ஊடகம்

Share

சனல் 4வின் அதிர்ச்சியூட்டும் காணொளி: புலம்பெயர் தமிழர்கள் மீது பழி போடும் தென்னிலங்கை ஊடகம்

இலங்கையில் நான்கு வருடங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிரித்தானியாவின் செனல் 4 ஊடகம் வெளியிடவுள்ள ஆவணப்படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள தகவல்களின் பின்னணியில், புலம்பெயர் தமிழ் அமைப்புகள் செயற்பட்டுள்ளதாக, கொழும்பின் சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் நான்கு வருடங்களுக்கு முன்னர் 275க்கும் அதிகமானவர்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் ராஜபக்சக்களுக்கு விசுவாசமாக செயற்பட்டவர்கள், இருந்ததாக இன்றைய தினம் (செப்டெம்பர் 05) பிரித்தானியாவின் சனல் 4 வெளியிடவுள்ள அதிர்ச்சியூட்டும் ஆவணப்படத்தில் கூறப்பட்டுள்ளதாக ’தி டைம்ஸ்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பல வருடங்கள் ராஜபச்சக்களின் விசுவாசியாக இருக்கும் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் உதவியாளராக இருக்கும், ஹன்சீர் அசாத் மௌலானா என்பவர் வழங்கிய சாட்சியங்களின் அடிப்படையில் இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தி டைம்ஸ் தெரிவிக்கின்றது.

இந்த நிலையில், அசாத் மௌலானாவிற்கு சுவிட்சர்லாந்தில் அகதி அந்தஸ்த்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், அரச அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தி, திட்டமிட்ட வாக்குமூலத்தைப் பெற்றுக்கொள்வதற்கு பிரித்தானிய தமிழர் பேரவை உள்ளிட்ட அமைப்புகள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்றின் பத்திரிகை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதி குறித்த காணொளி செனல் 4 அலைவரிசையில் ஒளிபரப்புவதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும், அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, தனது சட்டத்தரணி ஊடாக விடுத்த வேண்டுகோளுக்கு அமைய குறித்த ஒளிபரப்பு பிற்போடப்பட்டதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும், சுரேஷ் சலேவிற்கும் இடையிலான தொடர்பு குறித்த அசாத் மௌலானா வெளிப்படுத்தியுள்ள அனைத்து விடயங்களும் உண்மைக்கு புறம்பானவை எனவும், மௌலானா குறிப்பிடும் காலப்பகுதியில் சலே இலங்கையில் சேவையில் இருக்கவில்லை எனவும், சலே ஆவணங்களுடன் செனல் 4விற்கு தெளிவுபடுத்தியுள்ளதாகவும், குறித்த பத்திரிகை செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...