30 8
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த மனைவி நடந்தது என்ன…! தவிக்கும் கணவன்

Share

சவுதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றிவிட்டு இலங்கைக்கு திரும்பிய பெண் ஒருவர் காணாமல் போயுள்ளமை குறித்து கஹதுடுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

38 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். மூன்று பிள்ளைகளின் தாயான 38 வயதான சாரங்கா உதேஷிகா பெரேரா என்ற பெண் 2 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டு பணிப்பெண்ணாக வேலை செய்ய சவுதி அரேபியாவுக்குச் சென்றுள்ளார்.

வீட்டின் நெருக்கடி உட்பட பல கனவுகளுடன் அவர் வெளிநாடு சென்றிருந்தார். கடந்த ஏப்ரல் 19 ஆம் திகதிக்கு முன்பு இலங்கைக்குத் திரும்பி விடுவதாக அவர் தனது கணவரிடம் கூறியிருந்தார்.

எனினும் அதன் பின்னர் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்காதமையினால் அவரது கணவர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், ஏப்ரல் 14 ஆம் திகதி அதிகாலை 2.05 மணிக்கு அவர் இலங்கைக்கு வந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சாரங்காவின் கணவர் பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையிடம் மேற்கொண்ட விசாரணையிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை பொலிஸார் ஆய்வு செய்தபோது, ​​ஏப்ரல் 14 ஆம் திகதி அதிகாலை 3.30 மணியளவில் சாரங்கா 2 பொதிகளுடன் வாடகைக்கு எடுக்கப்பட்ட காரில் புறப்பட்டுச் சென்றமை தெரியவந்தது.

இதையடுத்து, விமான நிலைய பொலிஸ் அதிகாரிகள் காரின் பதிவு எண்ணைக் கண்டுபிடித்து, ஓட்டுநரை விசாரணைக்காக அழைத்தனர்.

விசாரணையின் போது, ​​தம்புள்ளை பகுதியில் உள்ள ஒரு சுப்பர் மார்க்கெட்டிற்கு அருகிலுள்ள ஒரு வீட்டிற்கு அந்த பெண் சென்றதாக தெரிவித்துள்ளார்.

எனினும் தம்புள்ளை பொலிஸ் அதிகாரிகளுடன் நடத்திய ஆய்வின் போது எந்தப் பெண்களும் இல்லை என்று குடியிருப்பாளர்கள் கூறியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கஹதுடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
29 9
இலங்கைசெய்திகள்

ஒரே சிறை அறையில் அடைக்கப்பட்ட தந்தையும் மகனும்

விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித ரம்புக்வெல்லவும் கொழும்பு சிறைச்சாலையின் M2...

28 11
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க ஆடைத் தொழிற்சாலை மூடப்பட்டமைக்காக காரணம் வெளியானது!

பிரித்தானியாவின் ஆடை உற்பத்தி நிறுவனமான நெக்ஸ்ட், கட்டுநாயக்கவில் இயங்கி வந்த தமது தொழிற்சாலையை, திடீரென மூடியமைக்கான...

27 11
இலங்கைசெய்திகள்

மகிந்த – கோட்டாபய சகாக்களுடன் அநுர தரப்பு பேச்சுவார்த்தை

மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோருடன் ஒன்றிணைந்து செயற்பட்டவர்கள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டவர்களுடன்...

26 12
இலங்கைசெய்திகள்

சிங்கள பேரினவாதிகளின் செயற்பாட்டினால் கோரப்பட்ட தமிழீழம்

தனி நாடு கோரி ஒரு இனம் போராடிய வரலாற்றை இந்த நாடு கொண்டுள்ளது என்றும், நாட்டில்...