கலகம் விளைவித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் கைது
இலங்கைசெய்திகள்

கலகம் விளைவித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் கைது

Share

கலகம் விளைவித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் கைது

அஹங்கம பொலிஸ் நிலையத்தில் கலகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குடும்ப பிணக்கு தொடர்பான முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட போது பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், அவரது கணவர் மற்றும் அவரது கணவரின் சகோதரி ஆகியோர் அஹங்கம பொலிஸ் நிலையத்தில் தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவம் காரணமாகவே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அஹங்கம பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் அஹங்கம கஹடகஹவத்த பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டுள்ள நிலையில், ஹம்பாந்தோட்டை துறைமுக பொலிஸ் பிரிவில் கடமையாற்றியுள்ளார்.

குறித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் குடும்ப தகராறு தொடர்பாக தனது கணவர் மற்றும் கணவரின் சகோதரிக்கு எதிராக கடந்த 10 ஆம் திகதி அஹங்கம பொலிஸில் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார்.

இருதரப்பினரையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து, விசாரணை மேற்கொண்டபோது இரு பிரிவினரும் பொதுமக்கள் முன்னிலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அசௌகரியத்தை ஏற்படுத்தியதால் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள், அவரது கணவர், கணவரின் சகோதரி ஆகியோர் பொதுமக்களுக்கு மற்றும் பொது ஒழுங்கை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் நிலையத்துக்கு வருகை தந்திருந்த பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் பொதுமக்கள் முன்னிலையில் அநாகரிகமாக நடந்துகொண்ட பெண் பொலிஸ் உத்தியோகத்தரிடம் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...