தெமட்டகொடையில் பெண் படுகொலை!

Woman murdered in Dematagoda e1653982908534 1000x600 1

கொழும்பு, தெமட்டகொடை ரயில் பாதையில் உள்ள உணவகம் ஒன்றில் பணிபுரியும் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் தெமட்டகொடை ரயில் பாதையில் உணவகம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

மேலும், உயிரிழந்த பெண் வைத்திருந்த 3 தங்க நகைகள், 3 தங்க மோதிரங்கள் மற்றும் 2 கையடக்கத் தொலைபேசிகள் என்பனவும் திருடப்பட்டுள்ளன எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் கொழும்பு, மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் தனது 10 வயது மகனுடன் உறங்கிக் கொண்டிருந்தபோதே கொலை செய்யப்பட்டுள்ளார் என்று விசாரணைகளை முன்னெடுத்துவரும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சம்பவத்தின் பின்னர் உணவகத்தின் ஊழியர்கள் மூவர் காணாமல்போயுள்ள நிலையில், தெமட்டகொடைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#SriLankaNews

Exit mobile version