வெலிவேரிய – வேபட பகுதியில் பெண்ணொருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அத்துடன் மேலும் இரு பெண்கள் காயமடைந்துள்ளனர்.
வௌிநாட்டிலிருந்து வந்த 32 வயதான பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரின் சகோதரி மற்றும் நண்பி ஆகியோர் காயமடைந்துள்ளனர்.
தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலை மேற்கொண்ட 37 வயதான சந்தேகநபர், அதே ஆயுதத்தால் தன்னுடைய கழுத்தின் பின்புறத்தை வெட்டிக்கொண்டு அருகிலிருந்த கிணற்றுக்குள் குதித்துள்ளார்.
கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சந்தேகநபர் பொலிஸ் பாதுகாப்புடன் கம்பஹா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் மேலும் கூறினர்.
#SriLankaNews