இலங்கைசெய்திகள்

அசாத் மௌலானா மீது பெண்ணொருவர் வழக்கு தாக்கல்

rtjy 131 scaled
Share

அசாத் மௌலானா மீது பெண்ணொருவர் வழக்கு தாக்கல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான புதிய தகவல்களை சனல் 4 ஆவணப்பதிவு ஊடாக வெளிப்படுத்திய கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரக்காந்தனின் முன்னாள் ஊடக செயலாளர் அசாத் மௌலானா மீது பெண் ஒருவர் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து மோசடியான முறையில் தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக கல்முனை நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

சாய்ந்தமருது பகுதியைச் சேர்ந்த 35 வயதான பெண் ஒருவரே இவ்வாறு வழக்கு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த முறைப்பாட்டிற்கமைய நேற்று (12) கல்முனை நீதிவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட நிலையில் கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் குறித்த பெண் தெரிவித்துள்ள குற்றச்சாட்டின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை மேற்கொண்டு மன்றிற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அசாத் மௌலானா போலியான ஆவணங்களை சமர்ப்பித்து முதல் திருமணத்தை மறைத்து தன்னை மறுமணம் செய்து பின்னர் மட்டக்களப்பு தனியார் விருந்தினர் விடுதி ஒன்றிற்கு அழைத்து சென்று பல்வேறு ஆசை வார்த்தைகள் கூறி அங்கு சில நாட்கள் தங்க வைத்து குடும்பம் நடாத்திய நிலையில் தன்னை ஏமாற்றி தலைமைறைவாகி உள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் குற்றச்சாட்டினை முன்வைத்து தற்போது அசாத் மௌலானாவின் வெளிநாட்டு தஞ்சம், நாடு கடத்தப்படுதல் என்பன மறுக்கப்பட்டு இவ்வழக்கினை மேலும் வலுவாக்குவதற்கு மூன்றாம் தரப்பொன்று முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

Share
Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...