12 32
இலங்கைசெய்திகள்

கிராண்ட்பாஸ் விபத்தில் பெண் ஒருவர் மரணம்! சடலம் குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவல்

Share

கொழும்பு மாவட்டம், கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வேல்ஸ் குமார மாவத்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

இருப்பினும், உயிரிழந்த பெண் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

ஒருகொடவத்தை சந்தியிலிருந்து ஆமர் வீதி பாபர் சந்தி நோக்கிப் பயணித்த பாரவூர்தி ஒன்று வீதியில் பயணித்த பெண் ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் என்று கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாரவூர்தியின் சாரதியைக் கைது செய்துள்ள கிராண்ட்பாஸ் பொலிஸார், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
world 163
உலகம்செய்திகள்

அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை எதிர்பார்ப்பு: உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை தொடர்ந்து வீழ்ச்சி!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பமாகலாம் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில், உலக...

world 162
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை 119 அவசர சேவை தாமதம்: சுவசெரிய முன்னுதாரணத்தை பின்பற்ற ஹர்ஷ டி சில்வா யோசனை

இலங்கை காவல்துறையின் 119 அவசர அழைப்பு முறைமையில் நிலவும் தாமதங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ...

world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...