யாழ்ப்பாணம் 5 சந்திப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் பிரபல வியாபாரி ஜுவிதா யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. 5 கிராம் 470 மில்லிகிராம் ஹெரோயின் உடமையில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
இவர் யாழ்ப்பாணத்தின் பிரபல ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரி என போலீசார் கூறினர்.
குறித்த பெண் பலகாலமாக இந்த வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தமை தெரிய வந்துள்ளது.
இவருடைய கணவரும் ஏற்கனவே போதைப்பொருள் வியாபாரத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் பல்கலைக்கழக மாணவர்களை மையப்படுத்தி ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரத்திலும் ஈடுபட்டு வந்திருக்கின்றார்.
அத்துடன் 10 முள் வாங்குபவர்களுக்கு ஒரு முள் இலவசம், தனது பெயரை பச்சை குத்தும் இளைஞர்களுக்கு விசேட கழிவுகளையும் இவர் வழங்கி தனது வியாபாரத்தினை செய்து வந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கபடுகின்றது ,
#SriLankaNews

