இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவில் நாயிற்கு மரண தண்டனை வழங்கிய பெண்ணுக்கு நேர்ந்த கதி

Share
12 43
Share

முல்லைத்தீவில் (Mullaitivu) நாயை தூக்கிலிட்ட விவகாரத்துடன் தொடர்புடைய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் 1907 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விடயம் குறித்து மேலும் தெரிய வருகையில், முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் இணக்க சபையில் நேற்று முன்தினம் (25) வழங்கப்பட்ட கொடூரமான தீர்ப்பு பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

அதாவது, சசிதா என்ற பெண், தனது ஆடு ஒன்றை நாய் கடித்துவிட்டதாக காவல்துறையில் முறையிட்டுள்ளார்.

இது தொடர்பான விசாரணை ஒட்டுசுட்டான் இணக்கசபைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், இணக்கசபையில் இருந்த மூன்று நீதவான்கள் நாயை ஆட்டின் உரிமையாளரிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்துள்ள நிலையில் அதற்கு நாயின் உரிமையாளரும் ஒத்துக்கொண்டார்.

அதன் பிறகு நீதவான்கள் குறித்த நாயை தூக்கில் இடுமாறு உத்தரவிட்டுள்ளதுடன், அதன் புகைப்படத்தையும் தமக்கு அனுப்புமாறு கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, நாயை வாங்கிய ஆட்டின் உரிமையாளரான பெண், நாயை தூக்கிலிட்ட நிலையில் இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தன.

குறித்த விடயம் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்ததுடன் மக்கள் தொடர்ச்சியாக கடும் விமர்சனங்களை முன்வைத்து வந்த நிலையில், சமூக ஊடகப் பதிவின் பேரில் 48 வயதுடைய குறித்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதேவேளை நாயின் உரிமையாளரான பெண் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், ”தன்னுடைய நாய் வீட்டில் இருந்ததாகவும், குறித்த ஆடு தனது வீட்டிற்கு வந்த போது தான் நாய் கடித்தது.

அத்துடன் ஆட்டின் உரிமையாளர் கோரிய நஷ்ட ஈட்டை என்னால் வழங்க முடியாததால் நாயை அவரிடம் ஒப்படைத்தேன்” என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...