கோட்டாபய 1
அரசியல்இலங்கைசெய்திகள்

அவசரகால சட்ட விதிகள் வந்த வேகத்திலேயே வாபஸ்! – பெரும்பான்மையை இழந்தமையால் வாலைச் சுருட்டியது கோட்டா அரசு

Share

அவசரகால சட்ட விதிகள் வந்த வேகத்திலேயே வாபஸ்!

கடந்த முதலாம் திகதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பொதுசனப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தாம் பிரகடனப்படுத்திய அவசரகால நிலையை ஐந்து நாள்களுக்குள் நேற்றிரவு திரும்பவும் தாம் வெளியிட்ட மற்றொரு அதிவிசேட வர்த்தமானி மூலம் விலக்கினார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.

இந்த அவசரகால நிலைமைப் பிரகடனம் தொடர்பான பிரேரணைக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைத் திரட்ட முடியாது என்ற இக்கட்டு நிலையிலேயே அவசரகால நிலையைத் தொடரும் தம் முயற்சியில் இருந்து அவர் வெற்றிகரமாகப் பின்வாங்கினார் என விடயமறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன.

தற்போதைய பொருளாதார நெருக்கடிகளை அடுத்து அரசுக்கு எதிரான மக்களின் எழுச்சி ஆர்ப்பாட்டங்கள் மிகத் தீவிரமடைந்து வருகின்றன. அவற்றை எதிர்கொள்வதற்காக பொதுசனப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவசரகால நிலையைப் பிரகடனம் செய்தார் ஜனாதிபதி.

எனினும், அத்தகைய பிரகடனம் செய்யப்பட்டு அடுத்த 14 நாள்களுக்குள் அதற்கு நாடாளுமன்றத்தில் விசேட தீர்மானம் மூலம் அனுமதி பெற வேண்டும். அதன் பின்னர் ஒவ்வொரு மாதமும் அத்தகைய நாடாளுமன்றத் தீர்மானங்கள் மூலம் அது நீடிக்கப்பட வேண்டும். இல்லையேல் அவசரகால நிலைமை காலாவதியாகிவிடும்.

கடந்த முதலாம் திகதி வெள்ளிக்கிழமை பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால நிலை ஏற்பாடுகளின் கீழ்தான் கடந்த சனிக்கிழமை இரவு முதல் திங்கள் காலை வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டமையுடன் ஞாயிறன்று சமூக ஊடக பரிமாற்றங்களுக்குத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு மூலம் முடக்கமும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த அவசரகால நிலைமைப் பிரகடனம், ஊரடங்கு உத்தரவு, சமூக ஊடக முடக்கம் ஆகியவற்றுக்கு எதிராகஉயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் நாளை வியாழக்கிழமை உயர்நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுக்கப்பட இருக்கையில், நேற்றிரவு இந்த அவசரகால நிலைமையை – அதைக் கொண்டு வந்த வேகத்திலேயே வாபஸ் பெற்றிருக்கிறார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.

அரசு பிறப்பித்த அவசரகால நிலையை அங்கீகரிப்பது தொடர்பான பிரேரணை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாமல் தோற்கடிக்கப்பட்டால், அதுவும் அரசு மீதான நம்பிக்கைப் பிரேரணை தோற்றமை போன்ற நிலைமையை ஏற்படுத்தி, அரசை பதவி இழந்தமை மாதிரியான கட்டத்தை – கட்டாயத்தை உருவாக்கி விடும் எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

இதனால் தானே தனது அரசை இந்த நெருக்கடி சமயத்தில், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னால் நிறுத்தும் கட்டாயத்தை ஏற்படுத்தாமல், தவிர்ப்பதற்காக இந்த அவசரகால நிலையை வாபஸ் பெற்றிருக்கின்றார் ஜனாதிபதி.

இதன்மூலம், நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளும் ஒரு கட்டாயத்தை தந்திரோபாயமாக கோட்டாபய அரசு தவிர்த்திருக்கின்றது எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

எனினும், மக்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் இந்தச் சூழலில் அவசரகால நிலைமைப் பிரகடனச் சட்ட ஏற்பாடுகள், ஒழுங்கு விதிகள் இல்லாமல் அந்தச் சிக்கல்களை அரசு எப்படிக் கையாளப்போகின்றது என்ற கேள்வியும் பாதுகாப்பு வட்டாரங்களில் எழுப்பப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...