இத்துடன் எனது அரசியல் வாழ்வு முடிந்துவிட்டது – நிதி அமைச்சர் அலிசப்ரி

Ali Sabry2

” இந்த நாடாளுமன்றத்தின் பதவிகாலம் முடிவடைந்த பிறகு, இனிமேல் நான் அரசியலில் ஈடுபடமாட்டேன். தேர்தலில் போட்டியிடவும்போவதில்லை.” – என்று நிதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” என்னைவிடவும் துறைசார் நிபுணர் ஒருவரை நிதி அமைச்சு பதவிக்கு நியமிப்பதற்கு வழிவிட்டே, நான் பதவியை இராஜினாமா செய்தேன். எனினும், அந்த பதவியை ஏற்பதற்கு எவரும் முன்வரவில்லை. ஆளுங்கட்சியில் உள்ள பலரும் நான் நிதி அமைச்சராக செயற்படுவதையே விரும்பினர். அதனால்தான் நிதி அமைச்சு பதவியை ஏற்றேன்.

சுயாதீனமாக செயற்பட இடமளிக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் கூறிவிட்டே பதவியேற்றேன். மத்திய வங்கியுடன் இணைந்து செயற்படுவேன். ஆனால் மத்திய வங்கியால் மேற்கொள்ளப்படும் முடிவுகளில் அரசியல் தீர்மானங்களை திணிக்க மாட்டேன். இந்த தவணையின் பிறகு நான் அரசியலில் ஈடுபடபோவதும் இல்லை. ” – என்றார்.

#SriLankaNews

Exit mobile version