பூரணையிலும் மது விற்பனை வேண்டும்!!

diana gamage

பூரணை நாட்களில் மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதிக்கும் யோசனையை சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே முன்மொழிந்துள்ளதுடன், அந்த நாளில் வெளிநாட்டவர்களுக்கு மாத்திரம் மதுபானங்களை விற்பனை செய்யுமாறும் குறிப்பிட்டுள்ளார்.

இராஜாங்க அமைச்சரின் யோசனை அரசாங்க பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டதாகவும் பூரணை நாட்களில் வெளிநாட்டவர்கள் மதுபானம் வாங்குவதற்கு வழியில்லை என்று அவர் குறிப்பிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மதுபானசாலைகளை 24 மணி நேரமும் திறக்க வேண்டும் என்று முன்னர் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Exit mobile version