தங்காலை பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாவது தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச விசேட கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.
இதன்படி இன்று (06.10.2025) முன்னிலையாக முடியாது என்று முன்னாள் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இதற்காக வேறு ஒரு திகதியை வழங்குமாறு விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
அதன்படி எதிரிவரும் ஞாயிற்றுக்கிழமை தங்காலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
இதன்படி தங்காலையில் போதைப்பொருள் கண்டுபிடிப்பு சம்பவம் தொடர்பாக படகுடன் கைது செய்யப்பட்ட பெலியாட் சனா என்ற நபரின் வாக்குமூலம் குறித்து விசாரிக்க அவர் அழைக்கப்பட்டிருந்தார்.