பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்குமா ?

img 5536

கோதுமை மா பற்றாக்குறையின் காரணமாக உற்பத்திகள் குறைவடைந்துள்ளன என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

கோதுமை மா விலை அதிகரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், சில கம்பனிகள் கோதுமை மாவினை பதுக்கி வைத்துள்ளதாகவும் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

மேலும் அரசாங்கத்தினுடைய தலையீடு இன்றி விலை அதிகரிப்புக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

87 ரூபாவுக்கு சந்தையில் கோதுமை மா விற்பனை செய்யப்படும் நிலையில் சில இடங்களில் 107 ரூபாவுக்கு கோதுமை மா விற்பனை செய்யப்படுவதாகவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது .

இவ்வாறான நிலையில் பேக்கரி உற்பத்தி நடவடிக்கைகள் சில பகுதிகளில் தடைப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தது .

Exit mobile version