பனை அபிவிருத்திச் சபையின் தலைமையகம் கொழும்புக்கு மாற்றப்படவுள்ளது என வெளியாகியுள்ள தகவலை அமைச்சரவை இணைப்பேச்சாளரும், துறைசார் அமைச்சருமான ரமேஷ் பத்திரண நிராகரித்துள்ளார்.
பானை அபிவிருத்தி சபையின் தலைமையகம் தற்போது யாழ்ப்பாணத்தில் இயங்கிவருகின்றது.
அதன் தலைவராக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, தலைமையகம் கொழும்புக்கு மாற்றப்படலாம் என்ற தகவல் வெளியானது. இது தொடர்பில் நாடாளுமன்றத்திலும் கூட்டமைப்பு எம்.பிக்களால் கேள்விகள் எழுப்பட்டன.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே மேற்படி தகவலை அமைச்சர் ரமேஷ் நிராகரித்துள்ளார். யாழ்ப்பாணத்தில்தான் தலைமையகம் தொடர்ந்தும் இயங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
#SriLankaNews