நாட்டில் கொரோனாத் தொற்று அதிகரித்துவரும் நிலையில் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அமுலில் உள்ள இந்த ஊரடங்குச் சட்டத்தை தொடர்ந்தும் நீடிப்பதா? இல்லை அதில் மாற்றங்கள் கொண்டு வருவதா? என்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.
எனவே இது தொடர்பில் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.