நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்பான தீர்மானம் நாளை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனாத் தொற்று பரவலாக அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு தரப்பினராலும் நாட்டை தொடர்ந்தும் முடக்குமாறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்ந்தும் நீடிக்கப்படுமா அல்லது தளர்த்தப்படுமா என்பது தொடர்பான தீர்மானம் நாளை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை வெள்ளிக்கிழமை கொரோனா ஒழிப்பு செயலணியின் விசேட கூட்டம் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச தலைமையில் இடம்பெறவுள்ளது.
இதன்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்பான தீர்மானம் எடுக்கப்படவுள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.