மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பான தீர்மானத்தை கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்றைய தினம் வெளியிடவுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்காக பின்பற்ற வேண்டிய சுகாதார பரிந்துரைகளை சுகாதார அமைச்சு – கல்வியமைச்சுக்கு வழங்கியிருந்தது.
இவ்விடயங்களை கருத்திற்கொண்டு பாடசாலைகளை மீண்டும் கட்டம் கட்டமாக திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு தீவிர கவனம் செலுத்தி வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும்போது சுகாதார வழிமுறைகளை முறையாகப் பின்பற்றுவதுடன் அவற்றில் மிகுந்த கவனம் செலுத்துவது மிக முக்கியமாகும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட மருத்துவ நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.