ஓடவும் மாட்டேன்! ஒளியவும் மாட்டேன்!! ஆதரவாளர்கள் முன்னிலையில் மஹிந்த சூளுரை

WhatsApp Image 2022 05 09 at 1.45.27 PM

பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்தும், அவர் பதவி விலகக்கூடாது என வலியுறுத்தியும் அலரிமாளிகைக்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறுகின்றது.

ஆளுங்கட்சி உறுப்பினர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்போராட்டத்தில், அவர்களின் ஆதரவாளர்களும் பங்கேற்றிருந்தனர்.

பின்னர், அலரிமாளிகையின் பிரதான மண்டபத்தில் ஆதரவாளர்களை மஹிந்த சந்தித்தார். அவர்கள் முன் உரையாற்றினார். மஹிந்தவின் உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு,

🔽அரசமைப்பைமீறி செயற்பட எவருக்கும் உரிமை கிடையாது.

🔽சவால்களை சந்தித்து, அவற்றை வெற்றிகொள்ள முயற்சிப்பதே எனது கொள்கை. மாறாக சவால்களுக்கு அஞ்சி, ஒருபோதும் பாய்ந்தோடியது கிடையாது.

🔽மகாநாயக்க தேரர்களால் சர்வக்கட்சி அரசுக்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதியும் தீர்மானதொன்றுக்கு வரலாம்.

🔽அழுத்தங்களுக்கு அடிபணியமாட்டேன். ஆனாலும் மக்களுக்கு நன்மை பயக்கும் தீர்வெனில், எந்தவொரு தியாகத்தை செய்வதற்கு தயார்.

🔽69 லட்சம் பேர் வழங்கிய ஆணையை – அவர்களின் அபிலாஷைகளை காட்டிக்கொடுக்கும் உரிமை எவருக்கும் கிடையாது.

🔽 ஹர்த்தால்கள், போராட்டங்களெல்லாம் எனக்கு புதிய விடயங்கள் கிடையாது.

🔽 இவ்வாறான நெருக்கடியான சூழ்நிலையில், குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள எதிரணிகள் முற்படக்கூடாது.

🔽 மக்களோடு மக்களாக இருந்து அரசியல் செய்தவன் நான். உங்களின் வலி, வேதனை புரிகின்றது.

🔽எனக்கு முதலாவதும் தாய் நாடு, இரண்டாவதும் தாய் நாடு ,மூன்றாவது தாய்நாடு.

ஆர்.சனத்

#SriLankaNews

Exit mobile version