“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகுவது தொடர்பில் அமைச்சரவைக்கு எதையும் அறிவிக்கவில்லை. அவரின் பதவிக் காலம் பற்றியும் கலந்துரையாடல் இடம்பெறவில்லை.”
– இவ்வாறு அமைச்சரவை இணைப்பேச்சாளரும் அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார் .
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது
இதன்போது, ‘ஜனாதிபதி பதவி விலக வேண்டும் எனப் பல தரப்பினரும் கோரி வருகின்றனர். எனவே, ஜனாதிபதியின் பதவிக் காலம் பற்றி அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டதா அல்லது தான் பதவி விலகுவது தொடர்பில் ஜனாதிபதி அமைச்சரவைக்கு ஏதேனும் தெரியப்படுத்தினாரா?’ என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
“அவ்வாறு எதுவும் கலந்துரையாடப்படவில்லை. அப்படியான கோரிக்கை விடுக்கப்பட்டு வருவது தொடர்பிலும் எனக்கு எதுவும் தெரியாது” – என்றார்.
#SriLankaNews
Leave a comment