ஜனாதிபதி தேர்தலில் விஜயதாச ராஜபக்ச

24 661eec8967dfd

ஜனாதிபதி தேர்தலில் விஜயதாச ராஜபக்ச

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு பல்வேறு தரப்பினர் தம்மிடம் கோரிக்கை முன்வைத்துள்ளதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ச(Wijeyadasa Rajapakshe) தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து எதிர்காலத்தில் தீர்மானிக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

பல்வெறு தரப்பினர் தம்மிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

குறிப்பாக ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுவில் அங்கம் வகிக்கும் பலர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு கோரியுள்ளனர்.

பெளத்த தேரர்கள், ஏனைய மதத் தலைவர்கள் உள்ளிட்ட தரப்பினரும் இவ்வாறானதொரு கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இந்த கோரிக்கைகள் குறித்து நன்றாக சிந்தித்து எதிர்வரும் வாரங்களில் இறுதித் தீர்மானத்தை அறிவிக்கவுள்ளேன்.

நாட்டின் எந்தவொரு அரசியல் கட்சி மீதும் மக்களுக்கு நம்பிக்கையில்லை.

எதிர்வரும் தேர்தல் வித்தியாசமானது தீர்மானம் மிக்கது.

கட்சியை பார்த்து வாக்களிக்கும் முறை மாறி போட்டியிடும் நபரை கருத்திற் கொண்டு வாக்களிக்கும் முறை உருவாகும்.” என தெரிவித்துள்ளார்.

Exit mobile version