மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பகுதியில் கணவனின் தாக்குதலுக்கு இலக்காகி மனைவி உயிரிழந்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது,ஓந்தாச்சிமடம் பகுதியைச் சேர்ந்த 31 வயதான பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்தள்ளார்.
சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் 38 வயதான கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் வெளிநாட்டிலிருந்து அண்மையில் வருகை தந்துள்ளதாகவும்,வெளிநாட்டிலிருந்து அனுப்பிய பணம் கையாளப்பட்ட விதம் தொடர்பில் இருவருக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
இதன்போது குறித்த நபர் தனது மனைவியைத் தாக்கியுள்ளதாகவும்,இதன்போது காயமடைந்த பெண், களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.