பிரபாகரனை பயங்கரவாதியாக்கியது யார்? – யாழில் தென்னிலங்கை நபர் கவனயீர்ப்பு போராட்டம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை பயங்கரவாதியாக்கியது யார் என்பதனை ஐ நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தான் வெளிப்படுத்துவேன் என கூறி தென்னிலங்கையைச் சேர்ந்த ஒருவர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் சுப்பிரமணிய பூங்கா முன்றலில் இன்று காலை முதல் இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

VideoCapture 20220331 093359

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஏன் பயங்கரவாதி ஆக்கப்பட்டார், என்ன காரணத்திற்காக அவர் குற்றவாளி ஆக்கப்பட்டார், அவர் ஒரு சாதாரண மனிதனாக இருந்திருப்பார்.

ஆனால் இலங்கையில் இருந்த அரசியல் பின்னணி மற்றும் ஏதோ ஒரு சூழ்ச்சியின் காரணமாகவே அவர் பயங்கரவாதி என பெயர் குறிப்பிடப்படும் அளவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அந்த நிலைமை மாற்றப்பட வேண்டும். இனியும் வடக்கிலிருந்து ஒரு பிரபாகரன் உருவாகும் நிலைமையினை நாங்கள் ஏற்படுத்தக்கூடாது.

இனி பிறக்கும் குழந்தைக்கு நாங்கள் சயனைட் குப்பியை கொடுக்காது வடக்கு-தெற்கு மக்கள் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் எதிர்காலத்தில் மீண்டும் ஒரு பிரபாகரன் போன்றவர்களை நாங்கள் உருவாக்காது தடுக்க முடியும் – என்றார்.

#SriLankaNews

Exit mobile version