வவுனியாவில் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் நேற்று முன்தினம் கல்வி திணைக்கள அதிகாரிகளுடன் வவுனியா அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான க. திலீபன் கூட்டம் நடாத்தியிருந்தார்.
அந்தக் கூட்டத்தில் 80 வீத பாடசாலைகள் திறக்கும் என தெரிவிக்கப்பட்ட போதிலும் அது பொய்த்துப்போயுள்ளது.
அதிபர் ஆசிரியர்கள் போராட்டம் இடம்பெற்றுவரும் நிலையில், வவுனியா மாவட்டத்தில் பாடசாலையை ஆரம்பிப்பது தொடர்பில் அபிவிருத்திக் குழுத் தலைவரினால் கடந்த செவ்வாய்க்கிழமை பிரதேச செயலகத்தில் கல்வித்திணைக்கள அதிகாரிகளுடன் சந்திப்பு இடம்பெற்றது.
இதன் போது பாடசாலைகள் 21 ஆம் திகதி அதிபர் ஆசிரியர்களுடன் திறக்கப்படும் எனவும் அது 80 வீதமாக இருக்கும் எனவும் கல்வித்திணைக்கள அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் இன்று 21 ஆம் திகதி வவுனியாவில் ஒரு சில பாடசாலைகளை தவிர ஏனைய பாடசாலைகள் மூடப்பட்டிருந்தது.
இதனூடாக அபிவிருத்தி குழு தலைவர் நடத்திய கூட்டம் பொய்த்துப்போயுள்ளதாக பலராலும் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
#SrilankaNews
Leave a comment