இலங்கை அழகி புஷ்பிகா டி சில்வாவுக்கு எதிராக 500 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த திருமதி உலக அழகி போட்டியின் இறுதி முடிவுகளை மாற்றுவதில் தான் தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறியதன் மூலம் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக அந்த வாக்குமூலத்தில் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த கருத்துக்காக புஷ்பிகா டி சில்வா தன்னிடம் பகிரங்க மன்னிப்பும் கோரவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பிட்ட நாட்களுக்குள் இழப்பீடு தொகையை செலுத்தி மன்னிப்பு கேட்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக வழக்கறிஞர்கள் மூலம் அனுப்பிய பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
#srilankaNews

