பரந்தன் – பூநகரி வீதிக்கு நடந்தது என்ன? – வீதிக்காக ஒதுக்கப்பட்ட நிதி அரசியல்வாதியின் பொக்கற்றுக்குள் என குற்றம்சாட்டுகிறார் அனுர

WhatsApp Image 2022 04 04 at 4.35.22 PM

பரந்தன் – பூநகரி வீதியின் நிலைமை தொடர்பான தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்தில் கேள்வி எழுப்பினார்.

தேசிய மக்கள் சக்தியினுடைய யாழ்ப்பாண மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அனுரகுமார திசாநாயக்க இது தொடர்பாக கேள்வியெழுப்பினார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

பரந்தனில் இருந்து பூநகரி ஊடாக நான் யாழ்ப்பாணம் வந்தேன். அந்த வீதி போடப்பட்டு எத்தனை ஆண்டுகள் சென்றிருக்கும். எட்டு ஆண்டுகளாகி இருக்குமா? அந்த வீதிக்கு என்ன நடந்தது? சாதாரணமாக அத்தகையவொரு வீதிக்கு 20 வருடங்களாவது உத்தரவாதம் இருக்கும். ஆனால் சில வருடங்களிலேயே அந்த வீதியால் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வீதிக்காக ஒதுக்கப்பட்ட நிதி அரசியல்வாதியின் பொக்கற்றுக்குள் காணப்படுகின்றது. இதுதான் எமது நாட்டின் அபிவிருத்தி.

விமானம் ஓடாத விமான நிலையம்
கப்பல்கள் வராத துறைமுகம், கிரிக்கெட் விளையாடாத மைதானம், கூட்டங்கள் இடம்பெறாத மண்டபங்கள் என்பனவே தற்போது காணப்படுகிறது. இது மக்களுக்கான அபிவிருத்தி அல்ல. இது ஊழல்வாதிகள் கொள்ளை அடிப்பதற்கான வழி. தற்போது எமது நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைக்கு மிக முக்கிய காரணம் ஊழலும் துஷ்பிரயோகமுமே – என்றார்.

#SriLankaNews

Exit mobile version