ஆரியகுளத்தில் வெசாக் கூடு கட்டுவதற்கு இராணுவத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கை யாழ் மாநகர சபை நிராகரிக்கப்பட்டது.
இதனையடுத்து, “வெசாக் கூடு ஆரியகுளத்தில் கட்டுவதற்கு அனுமதிக்கப்படாவிட்டால் யாழ் மாநகர சபையை கலைக்க நேரிடும்” என வடக்கு மாகாண ஆளுநரால் எச்சரிக்கப்பட்டு உடனடியாக அனுமதி கொடுக்குமாறு கட்டளையிட்டார்.
எனினும் நேற்றைய தினம் அவசர அவசரமாக மாநகர சபை உறுப்பினர்கள் இணைய வழியில் கூடி சபை கலைக்கப்படுவது பற்றி பிரச்சினை இல்லை என்றும், சபை தீர்மானத்தை மீற முடியாது என்றும், முறைப்படி எழுத்து மூல கோரிக்கையை தந்தால் வேறு ஏதாவது வழி இருக்கா என்று பரிசீலனை செய்வதாகவும் அறிவிக்கப்பட்டது.
அதனையடுத்து மாநகர சபை அனுமதி வழங்காமல் இருப்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.
#SriLankaNews