இலங்கைசெய்திகள்

வெலிகம தலைவர் கொலை: சந்தேக நபர்கள் குறித்த பல தகவல்கள் வெளியீடு; தென் மாகாணத்தில் விசேட தேடுதல் நடவடிக்கை!

Share

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பான விசாரணை தற்போது வெற்றிகரமாக நடைபெற்று வருவதாகவும், சந்தேக நபர்கள் குறித்த பல விபரங்கள் வெளியாகியுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

விசாரணை அதிகாரிகள் கூற்றுப்படி, துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மற்றும் கொலையுடன் தொடர்புடைய மற்றொரு நபர் குறித்து ஏற்கனவே பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் கித்சிறி ஜயலத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் 4 காவல்துறை குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

விசாரணையில் CCTV மற்றும் தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகள் உள்ளிட்ட தகவல்கள் பயன்படுத்தப்படுகின்றன. சி.சி.டி.வி காட்சிகளின்படி உந்துருளியின் இலக்கத் தகடுகள் தெளிவாகத் தெரியாததால், அவற்றின் உரிமையாளர்களை இதுவரை கண்டறிய முடியவில்லை என விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
துப்பாக்கிதாரியும், உந்துருளியின் ஓட்டுநரும் இன்னும் தென் மாகாணத்திலேயே பதுங்கியிருக்கலாம் என்று காவல்துறை சந்தேகிக்கிறது.

இதன் காரணமாக, இன்று (அக் 26) தென் மாகாணம் முழுவதும் விசேட தேடுதல் நடவடிக்கை ஒன்றை காவல்துறை மேற்கொண்டது.

Share
தொடர்புடையது
22 629eb027eea3e
அரசியல்இலங்கைசெய்திகள்

நாட்டில் கொலைக் கலாசாரம்: துப்பாக்கிச்சூடு நடக்கும் நேரத்தையும் இடத்தையும் ஊகிக்க முடியவில்லை – சஜித் பிரேமதாச

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பலவீனம் காரணமாக, நாட்டில் எந்த நேரத்தில், எங்கு துப்பாக்கிச்சூடு நடக்கும்...

25 68fdbdaf68fab
செய்திகள்இலங்கை

மேல் மாகாண முக்கிய பிரமுகர்கள் உட்பட 25 பேருக்கு கொலை மிரட்டல்

மேல் மாகாணத்தின் முக்கிய பிரமுகர்கள் உட்பட 25 நபர்களுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டிருப்பதாகத்...

f0e9cb2a9609e8e8b47dcbf4f046f1565241cfcf252679380eda49246f121e33
செய்திகள்இந்தியா

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: 41 பேர் பலி; சி.பி.ஐ. முதல் தகவல் அறிக்கை தாக்கல்! விஜய் கட்சியின் நிர்வாகிகள் மீது வழக்கு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் பங்கேற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கடந்த மாதம் (செப்...

images 1 7
உலகம்செய்திகள்

ரீகன் விளம்பரம் நீக்கப்படாததால் கோபம்: கனடாப் பொருட்களுக்கான வரிகளை 10% உயர்த்த டிரம்ப் அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரீகனைக் கொண்ட வரி எதிர்ப்பு விளம்பரத்தை ஒன்ராறியோ மாகாணம் ஒளிபரப்பியதையடுத்து, கனடாவிலிருந்து...